வீடு புகுந்து வாள்வெட்டு – வாகனமும் தீக்கிரை!!

You are currently viewing வீடு புகுந்து வாள்வெட்டு – வாகனமும் தீக்கிரை!!

முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்கு பகுதியில் நேற்றிரவு வீடு ஒன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டிலிருந்தவர்கள் மீது வாளால் வெட்டியுள்ளதுடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளது.

இதன்போது, தீ வைக்கப்பட்ட வாகனம் ஒன்று முற்றாக எரிந்துள்ளதுடன் மற்றொரு ஒரு வாகனம் சேதமடைந்துள்ளது. அத்துடன் வீட்டில் இருந்த ஒருவர் வாள்வெட்டிற்கு இலக்கான நிலையில் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முல்லைத்தீவு சிறீலங்கா காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வீடு புகுந்து வாள்வெட்டு - வாகனமும் தீக்கிரை!! 1
வீடு புகுந்து வாள்வெட்டு - வாகனமும் தீக்கிரை!! 2
வீடு புகுந்து வாள்வெட்டு - வாகனமும் தீக்கிரை!! 3
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments