இலங்கை விமானப்படையின் வை-12 விமானமொன்று விபத்திற்குள்ளானதில் 4 விமானப்படையினர் உயிரிழந்துள்ளனர்.
வீரவில விமானப்படை தளத்திலிருந்து இரட்மலானை விமான தளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானமே ஹப்புத்தனை மலைப்பகுதியில் விபத்திற்குள்ளாக்கியதாக சொல்லப்படுகின்றது.
ஆயினும் விபத்திற்கான காரணம் கண்டறியப்படாத போதும் முன்னதாக பெரும் வெடிப்பு சத்தம் கேட்டிருந்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த விமானப்படையினரது சடலங்களை தேடுவதில் காவல்துறையுடன் இலங்கை விமானப்படை மும்முரமாகியுள்ளது.