வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும் நோர்வே நாட்டவரை விரைவில் நாடு திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு வெளியுறவு அமைச்சகம் (UD) கேட்டுக்கொண்டுள்ளது.
அதே நேரத்தில், வைரஸ் தொற்றின் விளைவாக வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறும் UD ஆலோசனை வழங்கியுள்ளது.
வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள நோர்வே நாட்டவரை விரைவில் நாடு திரும்பும்படியும், வெளிநாட்டில் நிரந்தரமாக வாழும் நோர்வே நாட்டவருக்கு இது பொருந்தாது என்றும் வெளியுறவு அமைச்சகம் (UD) இன்று சனிக்கிழமை காலை கூறியுள்ளது.
பயணக் கட்டுப்பாட்டு விதிகளின் இறுக்கம், கொரோனா தொற்று உள்ள நாடுகளிளிலிருந்து பயணிப்பவர்கள் தனிமைப்படுத்தல், நாடுகளின் எல்லைகள் மூடப்படலாம், விமான போக்குவரத்துகள் ரத்து செய்ய ப்படலாம் மற்றும் பிற புதிய கட்டுப்பாடுகள் எடுக்கப்படலாம் என்பதால், இந்த அறிவுரைகள் விடுக்கப்படுவதாக UD கூறியுள்ளது.
ஆதாரம்/ மேலதிக தகவல்: Dagbladet