கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர கல்லூரியின் 115 மாணவிகள் 9 ஏ சித்தியை பெற்றுள்ளனர். 8 ஏ சித்தியை 59 பேரும், 7 ஏ சித்தியை 22 பேரும் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர கல்லூரி தமிழ் மொழி மூலமான பெறுபேற்றின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.
வெளியான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்ஷயா ஆனந்தசயனன் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
அதேவேளை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 74 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுள்ளனர்.
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் 11 மாணவர்களும், உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் 2 மாணவர்களும் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியைப் பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.