13 ஆவது அரசியலமைப்பை ஏற்கும் வரலாற்றுத் துரோகிகளை விரட்டுவோம்!

You are currently viewing 13 ஆவது அரசியலமைப்பை ஏற்கும் வரலாற்றுத் துரோகிகளை விரட்டுவோம்!

தமிழினம் மீது தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் ,தமிழின அழிப்பை மறைத்து 13 ஆவது அரசியலமைப்பை ஏற்கும் வரலாற்றுத் துரோகிகளை விரட்டுவோம் .

இலங்கையில் நிலவிவரும் இருவேறு தேசிய இனங்களுக்கிடையிலான ,தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு முடிவான அரசியல் தீர்வு உண்டெனில் அது தமிழீழத் தனியரசு ஒன்றுதான் என்பதனை சிறீலங்கா சிங்கள அரசு மட்டுமல்ல உலகின் அனைத்து நாடுகளும் நன்கறியும்.

உலக வரலாற்றில், மிகப்பெரும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களாகவும் அதற்கான நீதிக்காகவும் எமது இறைமையை நிலைநாட்டும் சுயநிர்ணய உரிமைக்காகவும் உலகத் தமிழர்கள் சமரசமின்றிப் போராடிவருகின்றோம்.  இதற்காக பல ஆயிரம் உயிர்க்கொடைசெய்யப்பட்டதோடு, பல இலட்சம் உயிர்கள் அழிக்கப்பட்டன.இன்றும் பல இலட்சம் குடும்பங்கள் தங்கள் குடும்பத்தலைமைகளை இழந்து  அனாதரவான நிலையில், சொல்லொணாத்துயர்களையும் பட்டிணிச்சாவையும் எதிர்கொண்டுள்ளனர்.70ஆண்டுகளுக்கு மேலாகத்தொடரும் மண் பறிப்புக்களுக்கு மத்தியில் , வாழ நிலமின்றி தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

எமது  தமிழீழ  உறவுகளின்  தாயகம் ,தேசியம்,தன்னாட்சியுரிமை அடிப்படையிலான ,தமிழர் தாயகம்   உதயமாவதற்கு,தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்  குழு  மற்றும்  தமிழ்நாட்டில்  பல்வேறு தமிழர் அமைப்புகள்  தொடர்ச்சியாக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற தருணத்தில் ,அனைத்தையும் குழப்பும் முறையில்

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசை இந்திய  அரசு வலியுறுத்த வேண்டுமென, திரு.சுமந்திரன் போன்றோர் 13ஐ வலியுறுத்தி, அதன் அடிப்படையில் தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்படவேண்டும்  என்று   கூறுவதை தமிழினம் என்றும் மன்னிக்காது என்பதை உறுதியாக சொல்லவிரும்புகிறோம். ஈழத்தமிழர்களது  ஜனநாயக விருப்பினை மதிக்காது .தமிழினம் என்றுமே ஏற்றுக்கொண்டிராத 13ஐ , நியாயப்படுத்தும் நோக்கில் எமது மக்கள் மத்தியில் தமிழ்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் பொய்ப் பிரச்சாரங்களினை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மேலும்  ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் மட்டுமே தீர்வு.

தமிழீழத் தனியரசு கோரிக்கை குறித்து ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.அதில்  புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்களிக்கும் படி வழிவகை செய்யப்பட வேண்டும்.சிங்கள பேரினவாத அரசு நடத்திய தமிழின  அழிப்பிற்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும்.அதற்காக தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவரும் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும் என இந்தத் தருணத்தில் அனைவரையும் வேண்டி நிற்கிறோம்.

இவற்றை தவிர்த்து தமிழ்நாட்டில் இருப்பவர்களை குழப்பும் வேலையை யாரும் செய்ய வேண்டாமெனவும், அவ்வாறு தொடர்ந்தும் குழப்பும் சூழல் ஏற்படுமானால் அப்படியான தமிழின விரோதிகளை விரட்டுவோம் என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இலட்சியத்தில் உறுதி தளராது தமிழர்கள்என்ற உணர்வோடு தொடர்ந்தும் பயணிப்போமென உறுதிகொள்வோம்.

​தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்  குழு​

13 ஆவது அரசியலமைப்பை ஏற்கும் வரலாற்றுத் துரோகிகளை விரட்டுவோம்! 1
13 ஆவது அரசியலமைப்பை ஏற்கும் வரலாற்றுத் துரோகிகளை விரட்டுவோம்! 2
பகிர்ந்துகொள்ள

Leave a Reply