13 நாளாக (14/09/2022) தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சுவிசு நாட்டினுள் பயணிக்கின்றது!

You are currently viewing 13 நாளாக (14/09/2022) தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சுவிசு நாட்டினுள் பயணிக்கின்றது!
13 நாளாக (14/09/2022) தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சுவிசு நாட்டினுள் பயணிக்கின்றது! 1

கடந்த 02/09/2022 நெதர்லாந்தில் அமைந்திருக்கும் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன்றலில் அரசியற் சந்திப்புக்களின் ஊடாக ஆரம்பமானது. அதாவது, சிறிலங்காப் பேரினவாத சர்வாதிகார அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழ தனி அரசே நிரந்தர தீர்வு என்பதனையும்.. கோரிக்கைகளாக முன்னிறுத்தியவாறு இப்போராட்டம் தொடர்கின்றது. கடந்துவரும் நாடுகளான பெல்சியம், லக்சாம்பூர்க் , யேர்மனி , பிரான்சு ஊடாக பல முக்கிய அரசியற் சந்திப்புக்களை மேற்கொண்டமை முக்கியமாகும்.

13 நாளாக (14/09/2022) தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சுவிசு நாட்டினுள் பயணிக்கின்றது! 2

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டு வெளி நாட்டமைச்சு , தெற்காசிய பசுபிக் பிராந்திய பொறுப்பதிகாரி , ஐரோப்பிய ஒன்றியத் தலைவரின் செயலாளர், ஐரோப்பிய ஆலோசனை அவை உறுப்பினர், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்… போன்றவர்களை சந்தித்திருந்தனர்.

குறிப்பாக பிரான்சில் தொடர்ந்த இப்பயணம் இன்று 13/09/2022 பிரான்சினுள் முல்கவுசு, சான் லூயி, மாநகரசபைகளிலும் தமிழர்களுடைய நியாயமான கோரிக்கை அடங்கிய மனுக்கள் ஒப்படைக்கப்பட்டன. மாலை 17 மணிப்பொழுதில் சுவிசு நாட்டினுடைய எல்லை மாநகரமான பாசல் எனும் இடத்தில் தமிழீழ மக்கள் மற்றும் சுவிசு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரின் வரவேற்போடு எழுச்சிகரமாக இலக்கு நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கின்றனர். எதிர் வரும் 19/09/2022 திகதி அன்று 14மணிக்கு ஐ.நா முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் தமிழீழ மக்களின் நீதிக்காகவும் விடுதலைக்கும் நடக்க இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொள்ள இருக்கின்றது. எனவே அனைத்து மக்களும் உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்ற வாருங்கள்.

13 நாளாக (14/09/2022) தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சுவிசு நாட்டினுள் பயணிக்கின்றது! 3

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

  • தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணா.

“இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்”

  • தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்”

«தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்»

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments