20 பந்துபரிமாற்ற துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

  • Post author:
You are currently viewing 20 பந்துபரிமாற்ற  துடுப்பாட்ட  போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான 20 பந்து பரிமாற்ற துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய துடுப்பாட்ட அணி ஐந்து 20 பந்து பரிமாற்ற, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு தொடர் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 பந்து பரிமாற்ற போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் நாணய சுழட்சியில் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 பந்து பரிமாற்ற முடிவில் 5 இலக்குகள் இழப்பிற்கு 203 ஓட்டங்களை குவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா-கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கியது.

நியூசிலாந்தின் பந்துவீச்சிற்கு கோலி-ராகுல் ஜோடி நாலாபக்கமும் சிதறடித்தனர். இதற்கிடையில் நியூசிலாந்து அணி மூன்று இலக்குகளை வீழ்த்தும் வாய்ப்புகளை நழுவவிட்டது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி கே.எல்.ராகுல் (3 ஆறுகள் , 4 நான்குகள்) அரை சதத்தை கடந்தார். ஒருவழியாக 10வது பந்து பரிமாற்றத்தில் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்ததையடுத்து இந்த ஜோடி பிரிந்தது.

அதனை தொடர்ந்து விராட் கோலி 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சிவம் துபே 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இலக்குகளை இழந்து இந்திய அணி சற்று தடுமாறியது.

இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர் நிலைத்து நின்று ஆடி ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார். இறுதியில் 20 பந்து பரிமாற்றத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 204 ஓட்டங்களை அடித்து 6 இலக்குகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

பகிர்ந்துகொள்ள