2024 இல் முதல் பத்து பணக்கார நாடுகள்!

You are currently viewing 2024 இல் முதல் பத்து பணக்கார நாடுகள்!

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது உலகளவில் நாடுகள் மற்றும் அதன் குடிமக்களின் பொருளாதார செழிப்பை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், GDP என்பது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், பொதுவாக ஆண்டுதோறும் அல்லது காலாண்டுக்கு ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பிற்கான அளவுருவாகவும் கருதப்படுகிறது.

அந்த வகையில் தற்போது தனிநபர் GDP அடிப்படையில் உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதலிடத்தில் Luxembourg நாடும், பத்தாவது இடத்தில் Macao SAR நாடும் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2024க்கான உலகளாவிய வளர்ச்சி என்பது 3.1 சதவிகிதமாக இருக்கும் என்றே கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள மிகவும் பணக்கார நாடுகளின் பட்டியலில்,

இரண்டாவது இடத்தில் அயர்லாந்தும் 3வது இடத்தில் சுவிட்சர்லாந்தும், 4வது இடத்தில் நோர்வே, சிங்கப்பூர் (5), ஐஸ்லாந்து (6), கத்தார் (7), அமெரிக்கா (8) டென்மார்க் (9), Macao SAR (10).

இதில் தனிநபர் GDP-ஐ கருத்தில் கொண்டு இந்தியாவின் நிலை 129வது இடத்தில் உள்ளது என்றே தெரியவந்துள்ளது. ஆனால் உலக GDP தரவரிசையில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜேர்மனியை அடுத்து இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments