25 தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்த செஷல்ஸ் நாட்டு கடற்படை!

You are currently viewing 25 தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்த செஷல்ஸ் நாட்டு கடற்படை!

செஷல்ஸ் நாட்டு கடற்படையினரால் மேலும் 25 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியின் தூத்தூர், பூத்துறையை சேர்ந்த நாயகம், அந்தோணி ஆகியோர் இரண்டு படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி செஷல்ஸ் நாட்டு கடற்படையினர் இரு படகுகளில் இருந்த 25 மீனவர்களை கைது செய்துள்ளனர்.

இதுவரை செஷல்ஸ் நாட்டு கடற்படையால் 5 விசைப்படகுகளுடன் 33 தமிழ்நாடு மற்றும் 25 வடமாநில மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம், செஷல்ஸ் நாட்டு கடற்படையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 33 தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி கன்னியாகுமரி மீனவர்கள் உட்பட 25 பேர் செஷல்ஸ் நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments