யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கு அருகே சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 43 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என சிறீலங்கா செய்திகள் தெரிவிக்கின்றன
கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிங்கள கடற்படையினர், இவ்வாறு சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, 6 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறீலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வந்ததன் பின்னர் காங்கேசன்துறை இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.