யாழ்ப்பாணம்-தையிட்டியில் தனியார் காணியொன்றில் அத்துமீறி அமைக்கப்பட்டுவரும் பெளத்தவிகாரைக் அமைத்தலுக்கெதிராக போராட்டத்தினை நடத்திய ,நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ. கஜேந்திரன் அராஜகமான முறையில் கைது செய்து சிறிலங்கா காவல்துறையால் தூக்கிச்செல்லப்பட்டார்.அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட உணர்வாளர்கள் பொதுமக்களை அச்சுறுத்தி விரட்டியதோடு, அவர்களில் 9 பேரைக் 23.05.2023 அன்று கைது செய்தமைக்கு எதிராக சிங்கள பொலிஸாரின் சூழ்ச்சிகளை முறியடித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தையிட்டி விகாரை முன் மக்கள் பலத்துடன் நேற்று போராட்டத்தை தொடங்கியது .
இந்நிலையில் தமிழர்களின் கனிகளை அபகரித்து கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் திறப்பு விழாவிற்கு எதிராக இன்று மாபெரும் கண்டப்போரட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒழுங்குப்படுத்தியுள்ளது
இதன் ஒரு அங்கமாக தொடர்ச்சியாக தையிட்டியில் தொடர்ந்து போராட்டத்தினை நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ. கஜேந்திரன் இன்று அதிகாலையிலும் பேரினவாத இராணுவத்தினரின் சட்டவிரோத திஸ்ஸவிகாரை திறப்பு விழாவுக்கு எதிராக போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.