உதவிகளை ஹமாஸ் தங்களுக்கு என பயன்படுத்திக் கொண்டால், மீண்டும் உதவிகள் முடக்கப்படும்!

You are currently viewing உதவிகளை ஹமாஸ் தங்களுக்கு என பயன்படுத்திக் கொண்டால், மீண்டும் உதவிகள் முடக்கப்படும்!

இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையேயான போர் தொடங்கி 13 நாட்களை எட்டியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு. காஸா பகுதியில் 500 பேர்களுக்கும் அதிகமானோர் பலியான வெடிகுண்டு தாக்குதலில் இஸ்ரேலுக்கு தொடர்பில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் ஹமாஸ் ஆதரவு இன்னொரு பிரிவு குறித்த தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்பிருப்பதாகவே கூறுகின்றனர்.

ஆனால் அந்த அமைப்பு, வெறும் புரளி என மறுத்துள்ளது. இதனிடையே, மருத்துவமனை குண்டுவெடிப்பு பற்றிய இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க மதிப்பீடுகள் குறித்து மத்திய கிழக்கில் சந்தேகம் இருப்பதாக ஜோர்டானின் வெளிவிவகார அமைச்சர் அய்மன் சஃபாடி தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் முன்னெடுக்கும் காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காசா மருத்துவமனை குண்டுவெடிப்பில் 471 பேர் கொல்லப்பட்டதாகவும் 314 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் தப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மனிதாபிமான உதவியுடன் 20 லொறிகளை அனுமதிக்கும் வகையில் காஸாவிற்குள் நுழையும் ரஃபா எல்லையைத் திறக்க எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபதா அல்-சிசி ஒப்புக்கொண்டார்.

11 நாட்கள் மொத்தமாக முடக்கப்பட்ட பிறகு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவப் பொருட்களை விநியோகிப்பதற்கு எகிப்து-காசா எல்லையைத் திறக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த உதவிகளை ஹமாஸ் தங்களுக்கு என பயன்படுத்திக் கொண்டால், மீண்டும் உதவிகள் முடக்கப்படும் எனவும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் அளிக்கும் பொருட்டு, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்த கோரிக்கை முன்வைத்த நிலையில், அமெரிக்கா தமது சிறப்பு உரிமையை பயன்படுத்தி அதை முடக்கியுள்ளது.

குறித்த வாக்கெடுப்பில் பிரித்தானியா கலந்துகொள்ளவில்லை. காசா பகுதியில் இஸ்ரேலின் குண்டுவீச்சுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பிராந்தியம் முழுவதும் கொந்தளிப்புடனே காணப்பட்டன.

இதனிடையே, 24 மணி நேர போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளும் எனில் சில பணயக்கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக மேற்குக் கரையில் உள்ள ஹமாஸின் அரசியல் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments