6அகவைச் சிறுவன் சாதனை!

You are currently viewing 6அகவைச் சிறுவன் சாதனை!
6அகவைச் சிறுவன் சாதனை! 1

ஒரு நிமிடத்திற்கான, கேள்வி பதில் போட்டியில் 68, நாடுகளின் பெயர்களை ஆங்கில மொழியில் கூறி உலக சாதனை படைத்துள்ளார் 6 வயதேயான  ஈழத்தமிழ்ச் சிறுவன் விஷ்ணு.
கனடாவில் மின்வலைத்தளத்தினூடாக உலகம் தழுவிய ரீதியில் 4 வயதிலிருந்து 6 வயதுனர் கலந்து கொண்ட. ஒரு நிமிடத்துக்கான கேள்வி பதில் போட்டி நடைபெற்றது . அந்த போட்டியில்  கலந்துகொண்ட  சுவிஸ் நாட்டில் நுசத்தல் மாநிலத்தில் இருந்து வல்வையை பிறப்பிடமாக கொண்ட ஆனந்தராஜா மைதிலி தம்பதிகளின் புதல்வன் விஷ்ணு என்ற சிறுவனே இந்த சாதனையை செய்துள்ளார். 
உலக நாடுகளின் கொடிகளை பார்வையிட்டு ஒரு நிமிடத்தில் 68, நாடுகளின் கொடிகளின் பெயர்களை சரியாக முறையே ஆங்கில மொழியில் கூறி உலக சாதனை படைத்துள்ளார் . இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள சிறுவன் 52 நாடுகளை மட்டும் கூறி இரண்டாவதாக இடத்தினைப் பெற்றது    விஷ்ணுவின் வெற்றியின் சிறப்பை வெளிக்காட்டுவதாக இருக்கிறது .அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற்று தமிழர்களை பெருமை கொள்ள வைத்துள்ள சிறுவன் விஷ்ணு. வல்வை கவிஞரில் ஒருவரான பாவலர் சுப்பிரமணியம் சுயேன்திரன் (Pavalar valvai suyen suyenthiran) அவர்களின் பேரன் என்பதும், அசிற்மணியத்தின் பூட்டனும் ஆவார் . தமிழர்களுக்கு பெருமையை தேடித்தந்த சிறுவன் விஷ்ணு அவர்களின் சாதனையை உலகில் வாழும் தமிழர்கள் பாராட்டிவருவதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள