தொடர்ச்சியாக 8ம் நாளாகத் தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது.
அதே நேரம் இன்று 02.03.2020 ஜேர்மன் நாட்டின் சார்புறூக்கன் மாநகரின் உதவி நகரபிதாவைச் சந்தித்ததுடன், தற்போதய காலகட்டத்தில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் பல வகைகளில் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்பதையும், 11 ஆண்டு காலம் கழிந்தும் தமிழர் தாயகத்தில் எம் இனம் ஒரு திட்டமிட்டமுறையில் மறைமுகமான இனவழிப்புக்குள்ளாக்கப் படுகின்றார்கள் எனவும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறுவுகளுக்காக மேற்கொள்ளப்படும் தொடர் போராட்டம் பற்றியும், பல முக்கிய அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து மனிதநேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்களினால் மனு கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மு.பகல் 11.00 மணியளவில் பிரான்ஸ் நாட்டைவந்தடைந்த ஈருருளிப்பயணம,; சார்குமின் நகரின் நகரபிதா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான அரசியல் சந்திப்பை மேற்கொண்டிருந்தது. அதே நேரம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகத்தில,; மனிதநேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்களை வரவேற்கும் முகமாக தமிழ் மொழியிலேயே “வணக்கம்” “வரவேற்கின்றோம்” என்று நுழைவாயிலில் எழுதி வைக்கப்பட்டிருந்த வாசகம் மன நெகிழ்வைத் தந்தது.
இதனைத் தொடர்ந்து னுNயு பத்திரிகையுடனான முக்கிய கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து, தொடர்ந்த ஈருருளிப் பயணம் சார்யூனியன் மாநகர சபை முதல்வரைச் சந்தித்ததுடன் மனுவும் கையளித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து பால்ஸ்பூர்க் நகரை வந்தடைந்தது ஈருருளிப் பயணம்.
இதே வேளை நாளை 03.03.2020 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரை வந்தடையவுள்ளது ஈருருளிப் பயணம். இவ்வேளையில் நாளை பி.பகல் 3 மணியளவில் (15.00 ) ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் உள்ள ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலில் கவனயீர்ப்பு நிகழ்வும் மேற்கொள்ளப்படவுள்ளது. வரலாற்றுக் கடமையை உணர்ந்து கலந்து கொள்ளுமாறு அனைத்து உறவுகளையும் அன்புடன் அழைக்கின்றோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.”