பொதிகளையும், ஆவணங்களையும், முக்கியமான கடிதங்களையும் காவிச்சென்று உரியவர்களிடம் பத்திரமாக சேர்க்கும் “Currier / விரைதூதர்” சேவையில் புதிய தொழிநுட்பத்தை, அமெரிக்க வாகனத்தயாரிப்பு நிறுவனமான “Ford / போர்ட்” அறிமுகப்படுத்த இருக்கிறது.
குறித்த வாகனத்தயாரிப்பு நிறுவனம் புதிதாக வடிவமைத்துள்ள வாகனமானது, பொதிகளை காவிச்செல்லும் சேவையை முற்றிலும் தானியங்கி நிலைக்கு எடுத்து செல்லுமென தெரிவிக்கப்படும் அதேவேளை, சாரதி இல்லாமல் தானியங்கி முறையில் ஓடக்கூடிய இவ்வாகனங்களில் பொதிகளும் இன்னபிற பொருட்களும் வாகனத்துக்குள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்படும் உரிய இடங்களில் வைக்கப்பட்டு அனுப்பப்படுமெனவும், இதற்கென தயாரிக்கப்படும் கைத்தொலைபேசி செயலியின் மூலம் பெறுநர்களுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல்களின் அடிப்படையில், பெறுநர்கள் காத்திருக்குமிடத்துக்கு குறித்த நேரத்தில் இவ்வாகனம் செல்லுமெனவும், பெறுநர்களுக்கு அனுப்பப்படும் குறுந்தகவலில் உள்ள தகவல்களை வைத்து பெறுநர்கள் தத்தமது பொதிகளையும், பொருட்களையும் பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் வெற்றிகரமாக பரீட்ச்சார்த்திக்கப்பட்ட இம்முறைமையானது இப்போது பிரித்தானியாவிலும் பிரீட்சார்சார்த்தமாக செயற்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கும் “Ford / போர்ட்” நிறுவனம், இத்திட்டத்துக்காக சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
காணொளி: