சுகாதார அதிகாரிகள் ஏப்ரல் 29 அன்று நோர்வேவை மீண்டும் திறக்க பரிந்துரைத்தபோதும், அரசாங்கம் மே 8 வரை காத்திருந்தது என்று கொரோனா மூலோபாயத்திற்கான ஆவணங்களை மேற்கொள்காட்டி Aftenposten எழுதியுள்ளது.
பொது சுகாதார நிறுவனம் (FHI), 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடைமுறையானது “தேவையில்லாமல் நீண்டது” என்று கருதுவதாக கூறியுள்ளது. மேலும், இது 10 நாட்களுக்கு குறைக்கப்பட வேண்டும் என்றும் கருதுகின்றது. முதன் முதலில் கடந்த வியாழன் அன்று அரசாங்கம் இந்த பரிந்துரையை பின்பற்ற தொடங்கியுள்ளது.
மேலும், பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளிளை மூடியதால் விளைவு சிறியது. இந்த நடவடிக்கை மார்ச் 12 அன்று FHI இன் ஆலோசனைக்கு எதிராக அறிமுகப்படுத்தப்பட்டது. ஏனெனில் சமூக பாதுகாப்பு மற்றும் தயார்படுத்தலுக்கான அமைச்சு (DSB) மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின்படி “மக்களிடையே பொது அமைதியின்மை” ஏற்படுவதைத் தவிர்க்கும் காரணங்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டது என்று மேலும் கூறப்பட்டுள்ளது.
மார்ச் 23 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க FHI மீண்டும் அறிவுறுத்தியபோதும், அரசு அதைப் பின்பற்றவில்லை. தொற்று பரவுவதற்கான ஆபத்து மிகப் பெரியது என்று அரசு நினைத்ததே அதற்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்: VG