OSLO திரை அரங்குகள் ; மே 8 முதல், மீண்டும் மெல்லத் திறப்பு!

  • Post author:
You are currently viewing OSLO திரை அரங்குகள் ; மே 8 முதல், மீண்டும் மெல்லத் திறப்பு!

Nordisk Film Kino, தனது திரைப்பட சேவையை மே 8 முதல் ‘Ringen’ திரை அரங்கில் ஆரம்பிக்கவுள்ளது என்றும், மேலும் மேலதிக பதினொரு திரை அரங்குகளும் மே 15 வெள்ளி முதல் திறக்கப்படும் என்றும் சனிக்கிழமை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆரம்பத்தில், ஒரு பகுதியை மட்டுமே திறப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம், நாங்கள் மே 8 இல் தலைநகரில் உள்ள ‘Ringen’ திரை அரங்கை திறக்கும்போது, முதலில் ஒரு மண்டபத்திற்கு மூன்று முதல் நான்கு காட்சிகள் மட்டுமே இருக்கும். நாங்கள் பயன்படுத்தும் அரங்குகளின் எண்ணிக்கை மற்றும் ஆரம்பத்தில் இருந்தே எந்த திரைப்படங்களைக காண்பிப்போம் என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை” என்று Nordisk Film Kino தலைமை நிர்வாக அதிகாரி ‘Jannicke Haugen’ கூறினார்.

அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், மே 15 அன்று மேலும் பதினொரு திரை அரங்குகள் திறக்கப்படும். Asker, Askim, ஒஸ்லோவில் உள்ள Colosseum, Halden, Horten, Hønefoss, Tønsberg (Kilden), Kristiansund, Lagunen i Bergen, Verdal மற்றும் ஒஸ்லோவில் Vika ஆகிய திரையரங்குகள் இவற்றுள் அடங்கும்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள