வரலாற்றில், முதல் முறையாக தன்னை ஒரு கோடீஸ்வரர் (BILLIONAIRE) என்று அழைக்கும் நிலையை கால்பந்து நட்சத்திர வீரர் “Cristiano Ronaldo” அடையவுள்ளார் என்று புகழ்பெற்ற நிதி ஆய்வு இதழ் Forbes எழுதியுள்ளது.
கொரோனா நெருக்கடி காரணமாக “Cristiano Ronaldo“, Juventus கழகத்தின் கடுமையான ஊதியக் குறைப்பை ஏற்றுக்கொண்டிருந்தார் . இருப்பினும் , இது போர்த்துகீசிய கால்பந்து நட்சத்திர வீரர் கோடீஸ்வர (BILLIONAIRE) சாதனை அமைப்பதைத் தடுக்க முடியாது.
அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க பொருளாதார இதழான Forbes’ கூற்றுப்படி , Cristiano Ronaldo 2020 ம் ஆண்டில் ஒரு பில்லியன் டாலர்களை சம்பாதித்த முதல் கால்பந்து வீரர் என்ற புகளைப் பெறவுள்ளார்.
முன்னதாக, வேறு விளையாட்டு நட்சத்திரங்கள் மூவர் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். 2009 ம் ஆண்டில் Golf வீரர் Tiger Woods , 2017 ஆம் ஆண்டில் குத்துச்சண்டை வீரர் Floyd Mayweather மற்றும் 2015 இல் கூடைப்பந்து நட்சத்திரம் Michael Jordan.
கொரோனா நெருக்கடி இருந்தபோதிலும், Ronaldo இந்த ஆண்டு 90 மில்லியன் டாலர் சம்பாதிப்பார் என்றும் 2020 ஆம் ஆண்டில் அவர் பில்லியன் டாலர் வரம்பை தொடுவார் என்றும் Forbes கூறுகின்றது.
(ஒரு பில்லியன் டாலர்கள், இன்றைய மாற்று விகிதத்தில் NOK 10.6 பில்லியனுக்கு சமனாகும்)
மேலதிக தகவல்: TV2