அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி சீனா செய்த செயல்!

You are currently viewing அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி சீனா செய்த செயல்!

தைவானை மீண்டும் ஒன்றிணைக்க முயற்சித்தால் அமெரிக்கா தலையிடும் என ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்த நிலையில், சீனா ராணுவ ஒத்திகையை நடத்தியுள்ளது. அண்டை நாடான தைவானை தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா முயற்சித்து வரும் நிலையில், ஆசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தைவானுக்கு ஆதரவு தங்கள் நாடு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.

கடந்த 23ஆம் திகதி ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை சந்தித்த ஜோ பைடன், பிராந்திய மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார். அதன் பின்னர் மாநாட்டில் பேசிய அவர், கடினமான சூழலில் இருக்கும் தைவானின் பாதுகாப்பதில் நாட்டின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.

அத்துடன் தற்போதைய நிலையில் ஒருதலைப்பட்சமான மாற்றங்களை எதிர்ப்பதையும் வலியுறுத்தினார். மேலும், தைவானின் பாதுகாப்பில் அமெரிக்கா ராணுவ ரீதியில் தலையிட தயாராக இருக்கும் எனவும், இது தங்களின் உறுதிமொழி என்றும் கூறினார். அதாவது, தைவானை இணைக்க சீனா முயற்சித்தால் அமெரிக்க தலையிடும் என பைடன் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், தைவான் அருகே இராணுவப் பயிற்சிகளை நடத்தியதாக சீனா நேற்று அறிவித்தது. இது தொடர்பாக சீன பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘தைவான் தீவைச் சுற்றி மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) சமீபத்தில் மேற்கொண்ட ரோந்து மற்றும் பயிற்சிகள் தைவானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டுக்கு எதிராக எடுக்கப்பட்ட தேவையான நடவடிக்கைகள் ஆகும்’ என தெரிவித்துள்ளார். இது அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி சீனா எடுத்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பல தசாப்தங்களாக சுதந்திரமான ஆட்சி இருந்தபோதிலும், சீனா தனது பிரதேசமாக தைவானை பார்க்கிறது என்றும், தேவைப்பட்டால் அந்நாட்டை கைப்பற்றுவோம் என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments