அமெரிக்கா உள்ளிட்ட 73 நாடுகளுக்கு ஜப்பான் தடை!

You are currently viewing அமெரிக்கா உள்ளிட்ட 73 நாடுகளுக்கு ஜப்பான் தடை!
அமெரிக்கா உள்ளிட்ட 73 நாடுகளுக்கு ஜப்பான் தடை! 1

சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 ,190-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் தமது நாட்டிற்குள் பரவுவதை தடுப்பதற்காக சுமார் 73 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது.

l

சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.

l

இந்த வைரஸ் உலக அளவில் சுமார் 8 லட்சம் பேருக்கு அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் சுமார் 42 ஆயிரம் பேர் கரோனா வைரஸால் இறந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்பை அடைந்துள்ள அமெரிக்கா உள்ளிட்ட 73 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பான் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இந்தத் தடை உத்தரவானது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

l

ஜப்பான் விதித்துள்ள தடையில் அமெரிக்கா, கனடா, தென்கொரியா, சீனா, சிலி, பிரேசில் போன்ற நாடுகளும் இடம்பெற்றுள்ளதாக ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் கொரோனா வைரசுக்கு இதுவரை 1,953 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 56 பேர் பலியாகியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள