அம்பிகை அவர்களின் போராட்டம் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை முரசறைந்து நிற்கின்றது!

You are currently viewing அம்பிகை அவர்களின் போராட்டம் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை முரசறைந்து நிற்கின்றது!

அன்பிற்குரிய தமிழீழ மக்களே!

உண்மைக்கும்  நீதிக்குமான  உணவுதவிர்ப்புப்  போராட்டத்தை  ஏற்றுநிற்கும்  திருமதி  அம்பிகை  செல்வக்குமார்அவர்களின் அறவழிப் போராட்டம் சர்வதேசங்களுக்கு தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளின் நீதிக்கானபோராட்டத்தை முரசறைந்து நிற்கின்றது.

ஆயுத அடக்குமுறைக்கெதிராக    அகிம்சை    வழிப்    போராட்டங்களில்    நம்பிக்கை    வைத்துப்    போராடிய ஈழத்தமிழினம்வரலாற்றிசைவில்   இன   அழிப்பிலிருந்து   தற்காத்து   நிற்பதற்காக   போராட்ட   வடிவங்களை மாற்றியமைத்து   இன்றும்   போராடி   வருகின்றது.   எமது   உரிமைக்கான   போராட்டங்கள்   சிங்களதேசத்தின் பயங்கரவாதம்  என்றபோலிப்  பரப்புரைக்கூடாக  முள்ளிவாய்க்கால்  மண்ணில்  பெரும்  இனப்  படுகொலையாக அரங்கேறி தொடர்ந்து கட்டமைப்புசார் இன அழிப்பாக தமிழீழ தேசத்தில் நாள்தோறும் நிகழ்ந்தேறி வருகின்றது.

திருமதி  அம்பிகை  அவர்களின்  தன்னெழுச்சி  அறவழிப்  போராட்டம்  என்பது  தான்  சார்ந்த  இனத்தின்  மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பிற்கான சர்வதேசத்தை நோக்கிய நீதித் தேடலுக்கு பிரித்தானிய அரசு காத்திரமான பங்களிப்பை  வழங்க  முன்வர  வேண்டுமென்ற  கோரிக்கைகளை  முன்வைத்தே  அறவழியில் முன்னோக்கி நகர்கிறது.

எமது  போராட்ட  வரலாறு  அதி  உன்னதமான  தியாகங்களைப்  பதிவு  செய்திருக்கின்றன.  இவ்வெழுச்சிமிகு தியாகங்களே  போராட்ட  இயங்கியலை  முன்னகர்த்தி  வருகின்றது.  தமிழீழ  விடுதலைக்காக  அனைத்துலக கட்டமைப்பின்  கீழ்  இயங்கிவரும்  நாம்  கொள்கை  வழி  நின்று  இலட்சிய  உறுதியோடு  பயணிக்கும்  அனைத்துக் கரங்களையும் பலப்படுத்தி ஆதரவளித்து செயற்பட்டுவருகின்றோம்.

பூகோள   நலனும்   பிராந்திய   புவிசார்   ஆதிக்கப்   போட்டிகளும்   எமக்கான   சர்வதேச   நீதியை   நிலைநாட்ட தடைகளாகஇருப்பினும்   தாயகத்திலும்,உலகெங்கிலும்   காத்திரமாக   முன்   நகரும்   சனநாயக   அறவழிப் போராட்டங்களும்  இதில்  அனைத்துலகிலும்  இயங்கிவரும்  தமிழ்  இளையோர்களின்  அறிவு  சார்  போராட்ட  ஒருங்கிணைவுடன் எமது    மக்களின்    ஒன்றுபட்ட    போராட்ட    அரசியல்    எழுச்சியின்    மூலம்    தடைகளை வெல்வதற்கான  நீதியின்  கதவுகள்  திறக்குமென்ற  நம்பிக்கையில்  அனைவரும்  இணைந்து  பணியாற்றுமாறு வேண்டி நிற்கின்றோம்.

பகிர்ந்துகொள்ள