ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளால் கொரோனா வைரஸ் இனம் காணப்பட்டுள்ளது!

  • Post author:
You are currently viewing ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளால் கொரோனா வைரஸ் இனம் காணப்பட்டுள்ளது!

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளால் கொரோனா வைரஸை இனம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள்தான் முதன் முதலாக கொரோனா வைரஸை இனம் கண்டு தனிமைப்படுத்தியுள்ளனர் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளன.

சீனாவிலிருந்து நாட்டிற்கு வந்த ஐந்து பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரிடமிருந்து இந்த வைரஸ் எடுக்கப்பட்டது.

மெல்போர்னில் உள்ள பீட்டர் டோஹெர்டி இன்ஸ்டிடியூட் (Peter Doherty-instituttet) ஆராய்ச்சியாளர்கள் இப்போது தனிமைப்படுத்தப்பட்ட இந்த வைரஸை உலக சுகாதார நிறுவனத்துடன் (WHO) பகிர்ந்து கொள்ளவுள்ளார்கள்.

இது கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்கும் பணியில் உள்ள உலகம் முழுவதும் உள்ள ஆய்வகங்களுக்கு விநியோகிக்கப்படும் .

இந்த நிறுவனத்தின் துணை இயக்குனர் மைக் காட்டன் (Mike Catton) இந்த முடிவை “மிக முக்கியமானது” என்றும், மேலும் இது வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் என்றும் விவரிக்கின்றார்.

விஞ்ஞானிகள் இப்போது வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை சோதித்து, அவை செயல்படுகின்றனவா என்று ஆராய்கின்றார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

மேலும், நோய்த்தொற்றின் அறிகுறிகளை காட்டத்தொடங்குவதற்கு முன்னரே, மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை வெளிப்படுத்தக்கூடிய ஒரு சோதனையை உருவாக்குவதையும் இந்த கண்டுபிடிப்பு சாத்தியமாக்கியுள்ளது.

பகிர்ந்துகொள்ள