இத்தாலி சனாதிபதியின் அவசரகால உத்தியோகபூர்வ உரை!

You are currently viewing இத்தாலி சனாதிபதியின் அவசரகால உத்தியோகபூர்வ உரை!
இத்தாலி சனாதிபதியின் அவசரகால உத்தியோகபூர்வ உரை! 1

கடந்த வாரம் நடைபெற்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களின் சந்திப்புக்குப் பின்பு உறுதியான உதவிகள் வழங்கப்படவில்லை என இத்தாலி அரசாங்கம் ஏமாற்றமடைந்தது. சனாதிபதி Mattarella 27-03-2020 ஆற்றிய உரையில் இந்த கடுமையான சூழலில் இருந்து மீண்டு வருவதற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து “ஒற்றுமையை” வேண்டிக்கொண்டார்.

Mattarelaவின் உரையில் முதலாவதாக உயிரிழப்புக்கள் சந்தித்த மக்களுக்கு அனுதாபங்களும் ஆறுதல்களும் தெரிவித்தார். இத்தாலி வரலாற்றின் ஒரு சோகமான பக்கத்தை நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இந்த நோயிக்கு எதிராக அயராமல் உழைக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் காவல்துறைக்கும் நன்றிகளும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து Mattarella இந்த அவசரகாலச் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக உணர்வுடன் ஒருமித்து வேலை செய்யவேண்டும் என வேண்டுகோளை முன்வைத்தார். இந்த நேரத்தில் இத்தாலி மக்களின் அர்ப்பணிப்பும் பொறுப்புணர்வையும் உலகம் முழுவதும் பாராட்டியுள்ளது.
வைரசின் பரவுதலை குறைப்பதற்கு தொடர்ச்சியாக அரசாங்கம் விதித்துள்ள நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அவரின் உரையின் இறுதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை முன்வைத்தார்.
பல்வேறு ஐரோப்பிய நாடுகள் இத்தாலிக்கு உதவிகள் மற்றும் ஒற்றுமையை தெரிவித்துள்ளார்கள். ஆனாலும் COVID-19 பரவுதலை எதிர்ப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சபை எவ்வித உறுதியான நடவடிக்கைகள் இன்னும் எடுக்கவில்லை. ஐரோப்பிய நாடுகள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த அச்சுருத்தல் இத்தாலிக்கு மட்டும் இல்லை, ஒட்டு மொத்த ஐரோப்பாவிற்கும் தான் என்பது உண்மை என தெரிவித்தார். இன்று பிளவுப்பட்டுள்ள ஐரோப்பா, பழைய கடடமைப்புக்கள் மற்றும் பழைய சிந்தனைகளை முறியடித்து ஒற்றுமையுள்ள ஒரு கட்டமைப்பை ஐரோப்பிய நாடுகள் கட்டி எழுப்ப வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார்.

இறுதியாக, எதிர்காலத்திற்கு ஒரு செய்தி: கடினமானச் சூழல்களில் எப்போதும்
இத்தாலிய மக்கள் தங்கள் சிறப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். “நிச்சயமாக நாம் ஒன்றாக மீண்டும் வெற்றி பெறுவோம்” என கூறி அவர் உரையை நிறைவு செய்தார்.

தமிழ் தகவல் மையம்-இத்தாலி

பகிர்ந்துகொள்ள