இந்தியாவில் ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிராபத்து!!

You are currently viewing இந்தியாவில் ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிராபத்து!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமடைந்துள்ள நிலையில் அவசர நோயாளிகளின் உயர்காக்கும் ஒக்சிஜனுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான நோயாளிகளின் உயிர் பறிபோகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த தட்டுப்பாட்டை சமாளிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை? என டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

என்ன செய்தேனும் ஒக்சிஜன் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய உயிர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அத்துடன், ஒக்சிஜன் சிலிண்டர்களை பயன்படுத்தி தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் இரும்பாலை உற்பத்தி நிறுவனங்கள் உடனடியாக அந்த சிலிண்டர்களை தொழிற்சாலை தேவைக்காக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கட்டளையிட்டனர்.

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தீவிர சுவாச நோயுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான ஒக்சிஜன் சிலிண்டர்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டை சமாளிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை மாலை அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments