இந்தியாவில் தீவிரமாகியுள்ள கொரோனா!அமேரிக்கா உதவி

You are currently viewing இந்தியாவில் தீவிரமாகியுள்ள கொரோனா!அமேரிக்கா உதவி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாகியுள்ளமை குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்திய அரசு மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை விரைவாக அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்திய அரசுடன் நாங்கள் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். மிக விரைவில் இந்தியாவுக்குத் தேவையான உதவிகளை வழங்குவோம் என அவா் உறுதியளித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை உலகில் எங்கும் இல்லாதவாறு மிக தீவிரமாக அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனைகள் நோயாளர் பராமரிப்புத் திறனை இழந்துள்ளன.

மூச்சுச் திணறலால் பாதிக்கப்படும் கொரோனா தொற்று நோயாளர்களுக்கு தேவையான ஒக்ஸிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒக்ஸிஜன் இல்லாமல் நோயாளர்கள் உயிரிழக்கும் பரிதாப சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் சிங்கப்பூா் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அவசரமாக ஒக்ஸிஜனைப் பெற்று வர இந்தியா அவசரமாக இராணுவ விமானங்களை அனுப்பியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி சராசரியாக 3 இலட்சத்து 50 ஆயிரம் வரையான தொற்று நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர். இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 16.6 மில்லியன் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுன், உயிரிழப்புக்கள் 1 இலட்சத்து 90 ஆயிரத்தைக் கடந்துள்ளன.

எனினும் இந்தியாவில் தினசரி உத்தியோகபூா்வமாக உறுதி செய்யப்படும் இலட்சக்கணக்கான நோற்று நோயளர்களை விட உண்மையான தொற்று நோயாளர் தொகை அதிகரிக்கமாக இருக்கலாம் என சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தொற்று நோய் மேலும் தீவிரமடையக் கூடும் எனவும் அவா்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் கோவிட் 19 தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க இந்திய கடும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதற்குத் தேவையான மூலப்பொருட்களைப் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து பெற இந்தியா முயன்று வருகிறது. இது தொடர்பில் இரு நாடுகளும் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன என வொஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

மருத்துவ விநியோகச் சங்கிலிகளில் உள்ள இடையூறுகள் மற்றும் தடைகளை சமாளிப்பதற்கான சாத்தியமான தீர்வுகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்து இந்த உலகப் பெருந்தொற்று நோய் எதிர்த்துப் போராட அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியம் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.

நேற்று மட்டும் 5700 பேர் இந்தியாவில் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments