வெடித்துச்சிதறியது இந்தோனேசியா நீர்மூழ்கி கப்பல்- 53 பணியாளரும் உயிரிழப்பு!

You are currently viewing வெடித்துச்சிதறியது இந்தோனேசியா நீர்மூழ்கி கப்பல்- 53 பணியாளரும் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் பாலி கடற்பகுதியில் கடந்த புதன்கிழமை காணாமல்போயிருந்த இந்தோனேசியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அது வெடித்துச் சிதறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நீர்மூழ்கிக் கப்பல் மூன்று பகுதிகளாக வெடித்துச் சிதறியுள்ளதாகவும், அதிலிருந்த 53 பேரும் உயிரிழந்துள்ளனர் எனவும் அந்நாட்டு இராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ உயிரிழந்த 53 பணியாளர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் இந்தோனேசியர்கள் அனைவரும் சோகத்தை பகிர்ந்து கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட 44 ஆண்டுகள் பழமையான நீர்மூழ்கிக் கப்பலான கே.ஆர்.ஐ.நங்கலா-402 என்ற கப்பல் பாலி தீவின் வடக்கே பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட போது தொடர்பை இழந்த நிலையில் கடலில் காணாமல் போயிருந்தது.

இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் முயற்சியில் இந்தோனேசிய இராணுவத்துக்கு உதவியாக சில பன்னாட்டு கப்பல்களும் ஈடுபட்டிருந்தன.

இந்நிலையில், குறித்த கப்பலுடையது என சில பொருட்கள் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments