இலங்கையில் அரசியல் கைதிகள் என யாருமில்லை!

You are currently viewing இலங்கையில் அரசியல் கைதிகள் என யாருமில்லை!

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 306 கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது என நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

வெசாக் தினமான நாளை கைதிகள் விடுதலையாகவுள்ள நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

கேள்வி:- தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அண்மையின் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரதமரிடத்தில் வலியுறுத்தியுள்ளனர். அவ்வாறு எவரையும் விடுவிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா?

பதில் :- அவ்வாறு எவரும் இல்லை, ஜனாதிபதி அவ்வாறு எந்த காரணிகள் குறித்தும் எமக்கு அறிவிக்கவும் இல்லை. இது பொதுவாக வெசாக் தினத்தில் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படும் நடவடிக்கையாகும். நீண்டகால தடுப்பில் குறிப்பாக பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் குறித்து தீர்மானம் எடுக்க முடியாது. அவர்களை விடுதலை செய்வது ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய இடம்பெறும் என்றார்.

பகிர்ந்துகொள்ள