இலங்கை அரசின் மனுவை தள்ளுபடி செய்த அமெரிக்க நீதிமன்றம்!

You are currently viewing இலங்கை அரசின் மனுவை தள்ளுபடி செய்த அமெரிக்க நீதிமன்றம்!

அமெரிக்காவின் ஹமில்டன் வங்கியினால் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இலங்கை அரசாங்கம் முன்வைத்த மனுவை, அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஹமில்டன் முதலீடு செய்த 257 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிகமான பத்திரங்கள் மற்றும் வட்டித் தொகையை செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இலங்கை அரசாங்கம் முன்வைத்த மனுவே நியூயோர்க்கின் தெற்கு மாவட்டத்தின் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியான டெனிஸ் கோட்டினால் நிராகரிக்கப்பட்டுள்ளது

இலங்கை அரசாங்கத்தின் சார்பில், Clifford Chance US LLP என்ற சட்ட நிறுவனம் இந்த மனுவை தாக்கல் செய்தது.

ஹமில்டன் ரிசர்வ் வங்கியானது, கரீபியன் தீவான செயின்ட் கிட்ஸ்- நெவிஸை தளமாகக்கொண்டதாகும்.

இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தை மீறியதற்காக, பத்திரங்களின் அசல் தொகையான 250,190,000 அமெரிக்க டொலர் மற்றும் வட்டியான 7,349,331.25 டொலரை ஐ மீட்டெடுக்க வங்கி நடவடிக்கை எடுத்தது.

சர்வதேச கடன்களை மீள செலுத்த முடியாது என இலங்கை அறிவித்திருந்த நிலையில், 10 ஆண்டு கால முதிர்ச்சியைக் கொண்ட பத்திரங்கள் கடந்த 2022 ஜூலை 25 ஆம் திகதி முதிர்ச்சியடைந்தன.

நியூயார்க்கை தளமாகக் கொண்ட Cede & Co. பத்திரங்களின் பதிவுதாரர் நிறுவனமாகும். ஹமில்டன் ரிசர்வ் வங்கி நன்மை பயக்கும் உரிமையாளராக உள்ளது.

இந்த நிலையில், Cede & Co சார்பாக நடவடிக்கை எடுக்க ஹாமில்டன் ரிசர்வ் வங்கிக்கு அந்நிறுவனம் அங்கீகாரம் அளித்துள்ளது. எனினும், பத்திரங்களின் பதிவுதாரர் Cede & Co என்பதால் ஹமில்டன் ரிசர்வ் வங்கிக்கு எந்த அதிகாரமும் இல்லையென இலங்கை தரப்பு வாதிட்டது.

எவ்வாறாயினும், இலங்கையின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், Cede & Co சார்பான ஹமில்டன் ரிசர்வ் வங்கியின் உரிமையை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments