உக்ரைனிய வீரர்களுக்கு ராணுவ பயிற்சியளிக்க ஐரோப்பிய யூனியன் திட்டம்!

You are currently viewing உக்ரைனிய வீரர்களுக்கு ராணுவ பயிற்சியளிக்க ஐரோப்பிய யூனியன் திட்டம்!

உக்ரைனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை உருவாக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் தற்போது 180வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கையில் இதுவரை 9 ஆயிரத்திற்கும் அதிகமான உக்ரைனிய வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக அந்த நாட்டின் ஆயுதப் படைகளின் தலைமை தளபதி திங்கள்கிழமையான இன்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் உக்ரைனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை உருவாக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை துறையின் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்து இருந்தார்.

இந்த முன்முயற்சியின் மூலம் உக்ரைனிய ராணுவம் அண்டை நாடுகளில் இருந்து தேவையான திறமைகளை பெறும் என தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக உக்ரைனிய வீரர்களுக்கு பிரித்தானியாவில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ராணுவம் பயிற்சி அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments