உக்ரைன் மீது ரஷ்யா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

You are currently viewing உக்ரைன் மீது ரஷ்யா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

கசென்னி டோரெட்ஸ் ஆற்றின் குறுக்கே ஸ்லாவியன்ஸ்கில் உள்ள சாலைப் பாலத்தை உக்ரைன் வெடிவைத்து தகர்த்தியதாக ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதலில், உக்ரைனிய படைகள் தடுப்பு தாக்குதல் மட்டுமே நடத்திய நிலையில், தற்போது ரஷ்ய இலக்குகள் மீது உக்ரைனின் ஆயுதப்படை வீரர்கள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில்,கசென்னி டோரெட்ஸ் ஆற்றின் (Kazenny Torets River) குறுக்கே ஸ்லாவியன்ஸ்கில் (Slavyansk) உள்ள சாலைப் பாலத்தை உக்ரைன் வெடிவைத்து தகர்த்துள்ளனர்

இதுத் தொடர்பாக பேசிய ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ், உக்ரேனிய ஆயுத அமைப்புகளின் போராளிகள் [சாலைப் பாலத்தை] தகர்க்க திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

மேலும் முக்கியமான போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களுக்காக உக்ரைனை ஷ்யப் பிரிவுகள் குற்றம் சாட்டுகின்றனர் என்றும் மிஜின்ட்சேவ் (Mizintsev) குறிப்பிட்டார்.

இந்த போர் நடவடிக்கையில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு வசதிகளை ஷெல் செய்வதில் ரஷ்ய துருப்புக்கள் பங்கேற்கவில்லை என்றும், பொதுமக்களை மனிதாபிமானத்துடன் தொடர்ந்து நடத்துவதோடு, ஆதரவையும் உதவியையும் வழங்குவதாக மிஜின்ட்சேவ் மீண்டும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments