எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவர் இந்திய கடற்படையினரால் கைது!

You are currently viewing எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவர் இந்திய கடற்படையினரால் கைது!

இந்திய கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வடமராட்சி, ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய கடற்படையால் கைது செய்யபட்டு நாகப்பட்டினம் கடற்படை முகாம் மூலமாக வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளரிடம் ஒப்படைக்கபட்டனர்.

ஆதி கோவிலடி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குலவீரசிங்கம் – நிமலதாஸ் மற்றும் தர்மராஜ் – கஜிபன் ஆகிய இருவருமே இவ்வாறு எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் 21.10.21 நேற்று முன்தினம் இல்ங்கையில் இருந்து OFRP-A-5948 என்ற படகில் மீன்பிடிக்க புறப்பட்டு கோடியகரைக்கு கிழக்கே 16.5 NM தொலைவில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இந்திய கடற்படையால் (IN SHIP INS BANGARAM) எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக 22.10.21 நேற்று 17.30 மணிக்கு கைது செய்யப்பட்டு நாகப்பட்டினம் கடற்படை யால் 23.10.21 இரவு 01.00 மணிக்கு வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளரிடம் ஒப்படைக்கபட்டனர்.

இவர்கள் மீது வேதாரண்யம் கடற்கரை காவல் நிலைய குற்ற எண் 11/21 u/s 3/10, 7/14 MZI ACT 1981 ஆக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவர்கள் எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதி துறை நடுவர் முன் ஆஜர்படுத்தபட உள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments