ஒஸ்ரேலியாவில் நீதிக்கான போராட்டம்!

You are currently viewing ஒஸ்ரேலியாவில் நீதிக்கான போராட்டம்!


தமிழீழ தாயக உறவுகளின் நீதிக்கான கோரிக்கைக்கு தீர்வுதேடும் பயணத்தில், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையில் மேற்கொள்ளப்படும்தீர்மானத்தில், தமிழர் இனைழிப்புக்கான நீதியை பெற்றுக்கொள்ள சிறீலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு (ICC) பாரப்படுத்தவேண்டும் என்று அனைத்து தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

அத்தோடு தமிழர் இனவழிப்பு தொடர்பாக சர்வதேச நீதிக்கான பொறிமுறை (IIIM) ஒன்றை ஏற்படுத்துமாறும் அதன் மூலம் சாட்சிகளையும் ஆவணங்களையும் பதிவுசெய்வதற்கான வழிவகையை ஏற்படுத்துமாறு கோருவதுடன், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் விசேட தூதுவரை நியமித்து இலங்ககத்தீவில் தொடரும் அடக்குமுறைகளை கண்காணிக்குமாறும் தாயகமக்கள் கோரிநிற்கின்றார்கள். சர்வதேச கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமது அரசியல் உரிமையை நிலைநிறுத்த உதவுமாறும் தாயகமக்கள் கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்கள்.

இவற்றை வலியுறுத்தி, எமது மக்கள் தாயகத்தில் சுழற்சி முறையான உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகிலும் பல கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக, பிரித்தானியாவில் திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்களும் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

ஆனால் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைபானது, தமிழ் மக்களின் நீதிக்கான தீர்வுகளை தவிர்த்து மீளவும் சிறிலங்கா அரசுக்கு காலஅவகாசம் வழங்குகின்ற தீர்மானம் ஒன்றையே முன்வைக்கின்ற நிலைமை காணப்படுகின்றது.

எனவே, தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளை உள்ளடக்குமாறு கோரி ஒஸ்ரேலியாவின் பெருநகரங்களில் (சிட்னி, மெல்பேர்ண், பேர்த், பிரிஸ்பேர்ன், அடிலெயிட்) எதிர்வரும் சனிக்கிழமை 13-03-2021 அன்று பல்வேறு கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்த வகையில் மெல்பேணில் மதியம் 02 மணி தொடக்கம் மதியம் 3.30 மணிவரை State Library Victoria (in front of Melb. Central @ Swanston Street) இற்கு முன்பாக தமிழர் நீதிக்கான கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு: 0433 002 619 OR 0406 429 107 & 0437 332 240

பகிர்ந்துகொள்ள