ஓஸ்லோவில் புதிய கொரோனா தொற்றுக்கள் : நோர்வேயில் மொத்தம் 56 தொற்றுக்கள்! (சமீபத்திய செய்தி)

  • Post author:
You are currently viewing ஓஸ்லோவில் புதிய கொரோனா தொற்றுக்கள் : நோர்வேயில் மொத்தம் 56 தொற்றுக்கள்! (சமீபத்திய செய்தி)

ஓஸ்லோவில் ஏழு புதிய கொரோனா தொற்றுக்களை தொடர்ந்து நோர்வேயில் மொத்தம் 48பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒஸ்லோ நகராட்சி தொற்று கட்டுப்பாட்டு ஆலோசகர் Tore W. Steen இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

எனவே ஒஸ்லோ நகராட்சியில் மொத்தம் 14 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான தொற்றுக்கள் வெளிநாடுகளில் இருந்து அதிலும் குறிப்பாக இத்தாலியில் இருந்தே பரவியுள்ளது.

இதுவரை மொத்தம் 48 பேர் நோர்வேயில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்தி:-
நோர்வேயில், மொத்தம் 56 பேர் இப்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோர்வே பொது சுகாதார நிறுவனத்தின் துணை இயக்குனர் Line Vold இன்று செய்தியாளர் கூட்டத்தில், நோர்வேயில் இப்போது மொத்தம் 56 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள