கடனில் சிக்கிய 31 இலட்சம் குடும்பங்கள்! – உணவுக்காக மட்டும் 7 இலட்சம் குடும்பங்கள் கடன் சுமையில்!

You are currently viewing கடனில் சிக்கிய 31 இலட்சம் குடும்பங்கள்! – உணவுக்காக மட்டும் 7 இலட்சம் குடும்பங்கள் கடன் சுமையில்!

30 இலட்சத்து 29 ஆயிரத்து 300 கடன்பட்ட குடும்பங்களில் 6 இலட்சத்து 97 ஆயிரத்து 800 குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கடனாளிகளாக உள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்தார்.

மொத்தக் கடனாளி குடும்பங்களில் உணவுக்காகக் கடன் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 22.3 சதவீதமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

6,97,800 குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யக் கடனாளிகளாக உள்ளதாகவும் அதில் 1 இலட்சத்து 58ஆயிரத்து 200 பேர் உள்ளடங்குவதாகவும் பேராசிரியர் கூறினார்.

இதேவேளை, கடனை மீளச் செலுத்துவதற்காக ஏறக்குறைய 370,000 குடும்பங்கள் கடன் பெற்றுள்ளதாகவும், 4,91,000 குடும்பங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்காக கடன் பெற்றுள்ளதாகவும் வசந்த அது கோரல தெரிவித்தார்.

53,200 குடும்பங்கள் கட்டிடங்கள் கட்டுவதற்கும் புதுப்பிப்பதற்கும் கடன் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொருளாதார நெருக்கடியின் பின்னர் (2022ஆம் ஆண்டிற்குப் பின்னர்) 6,88,000 குடும்பங்கள் கடனாளிகளாக மாறியுள்ளதாகத் தெரிவித்த வசந்த அத்துகோரல, பெரும்பாலானோர் அடமானச் செயற்பாடுகள் மூலம் கடன் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

அடமான முறையில் கடன் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 9,70,000 என்று அவர் கூறினார்.

இது தவிர வங்கிகளில் 97,000 குடும்பங்களும், நிதி நிறுவனங்களில் 2,72,250 குடும்பங்களும், பண தரகர்களிடம் 3,03,500 குடும்பங்களும் கடன் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments