கண்ணீரால் நிறைந்தது முல்லைதீவு சுனாமி நினைவாலயம்!

You are currently viewing கண்ணீரால் நிறைந்தது முல்லைதீவு சுனாமி நினைவாலயம்!

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில்  ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருந்தனர்

உயிரிழப்புகள் மாத்திரமின்றி பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிவடைந்த இந்த துன்பியல் நிகழ்வான  ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்று  16 ஆண்டுகள் கடந்துள்ளன

இவ்வாறு பதினாறு ஆண்டுகளை கடந்துள்ள போதிலும் உயிரிழந்த தங்களுடைய உறவுகளை நிணைந்து நாடளாவிய ரீதியில் வருடம் தோறும் இந்த ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில்  முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்திருக்கின்ற சுனாமி நினைவாலய வளாகத்தில் இன்று காலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது

சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை விசேட வழிபாடுகள் இடம் பெற்றதோடு அங்கு உயிரிழந்தவர்களின் உறவுகள் பலர் கலந்து கொண்டு தமது உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

உறவுகள் தங்களுடைய உறவுகளை நிறைந்து உணர்வுபூர்வமாக இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுத்துள்ளனர் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக  சுகாதார நடைமுறைகளை பேணி  உயிரிழந்த தமது உறவுகளை  அஞ்சலித்து வருகின்றனர்  

சுனாமி  நினைவாலய வளாகம் மக்களின் கண்ணீர் மற்றும் அழு  குரல்களால் நிறைந்து காணப்படுகின்றது

பகிர்ந்துகொள்ள