கனகராயன் குளத்தில் விபத்தில் ஒருவர் பலி!!

You are currently viewing கனகராயன் குளத்தில் விபத்தில் ஒருவர் பலி!!

வவுனியா – கனகராயன்குளம், கொல்லர்புளியங்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த கென்ரர்ரக வாகனம் கொல்லர்புளியங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபருடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த முத்து இராமலிங்கம் என்ற 61வயது குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக கனகராஜன்குளம் சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply