கற்கோவளம் சிறீலங்கா இராணுவ முகாமிற்கு அருகில் மனித மண்டையோட்டுடன் எலும்புகள்!

You are currently viewing கற்கோவளம் சிறீலங்கா இராணுவ முகாமிற்கு அருகில் மனித மண்டையோட்டுடன் எலும்புகள்!
யாழ்ப்பாணம், கற்கோவளம் சிறீலங்கா இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள ஒரு காணிக்குள் இருந்து மனித மண்டையோட்டுடன் கூடிய எலும்பு சிதிலங்கள் இன்று (ஜூன் 12) கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கற்கோவளம் சிறீலங்கா இராணுவ முகாமிற்கு அருகில் மனித மண்டையோட்டுடன் எலும்புகள்! 1
குறித்த காணிக்குள் மனித மண்டையோட்டுடன் எலும்புகள் காணப்படுவதாகப் பருத்தித்துறை சிறீலங்கா காவற்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது. தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சிறீலங்கா காவற்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த எலும்புக்கூடுகள் யாருடையவை, எப்படி அங்கே வந்தன என்பது குறித்துப் சிறீலங்கா காவற்துறையினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
https://youtu.be/DwFl0rxXwzE
இப்பகுதியில் கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகவில்லை என்றாலும், இந்த எலும்புக்கூடு கண்டுபிடிப்பு அப்பகுதி மக்களிடையே பல்வேறு கேள்விகளையும் கவலைகளையும் எழுப்பியுள்ளது. சிறீலங்கா காவற்துறையினரின் மேலதிக விசாரணைகளின் பின்னரே இந்தச் சம்பவம் குறித்த முழுமையான தகவல்கள் வெளிவரும்.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply