காரில் போதைப்பொருள் கடத்தியவர் கைது!!

You are currently viewing காரில் போதைப்பொருள் கடத்தியவர் கைது!!

மட்டக்களப்பில் இருந்து  வாழைச்சேனைக்கு காரில் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ஜஸ் போதைப்பொருளை  கடத்திச் சென்ற பிரபல போதைப் பொருள் வியாபாரி டிலக்ஷன், நேற்றிரவு (18) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவருடன், மேலும் இருவரையும்  வாழைச்சேனை, கும்புறுமூலை சந்தியில் வைத்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்து, தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் வாழைச்சேனை சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலையிலுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து, கும்புறுமூலைச் சந்தியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனையை நோக்கிப் பிரயாணித்த காரை வழிமறித்து
சோதனையிட்டனர். 

இதன்போது, காரில் மறைத்துவைக்கப்ப சுமார் 13 இலச்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ஜஸ் போதைப்பொருளை மீட்டதுடன், பிரபல போதைப்பொருள் வியாபரியான டிலக்ஷன் உட்பட 3 பேரையும் கைது செய்தனர்.

சந்தேகநபர்களை, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments