கிளிநொச்சியில் உறக்கத்துக்குச் சென்றவர் சடலமாக மீட்பு!

You are currently viewing கிளிநொச்சியில் உறக்கத்துக்குச் சென்றவர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் வழமைபோன்று மேசன் வேலையினை முடித்துவிட்டு வீட்டில் படுத்து உறங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முருகன் இரத்தினகுமார் என்ற 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

மனைவி, பிள்ளைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த சமயம் தனிமையில் படுத்து உறங்கிய நிலையில் இவ்வாறு சடலமாக இனம் காணப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி சிறீலங்கா காவற்துறையினர் மேலதிய விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments