“கொரோனா” அவசரகால நிலையை சமாளிக்க, குடியியல் / உள்ளக பாதுகாப்புப்படைகள் (Civil Defense) தயார் நிலையில்!!

You are currently viewing “கொரோனா” அவசரகால நிலையை சமாளிக்க, குடியியல் / உள்ளக பாதுகாப்புப்படைகள் (Civil Defense) தயார் நிலையில்!!

“கொரோனா” பரவலினால் நோர்வே பெரும் பாதிப்புக்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், முழு நாடுமே தனிமைப்படுத்தப்பட்டதுபோன்ற நிலை தோன்றியிருப்பதால், அவசரகால நிலைமையொன்று பிரகடனப்படுத்தப்படும் பட்சத்தில், ஏற்படக்கூடிய கடுமையான நிலைலைமைகளை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக, நோர்வேயின் “குடியியல் மற்றும் உள்ளக பாதுகாப்பு படைகள்” தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் சில பாகங்களிலிருந்து ஏற்க்கெனவே “குடியியல் மற்றும் உள்ளக பாதுகாப்புப்படை” தலைமையகத்துக்கு உதவி கோரி வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் மேற்படி படைகளின் தளபதி “Tore Ketil Stårvik“, ஆரம்பகட்ட உதவிகளாக, சுகாதாரம் மற்றும் வைத்தியத்துறை சம்பந்தப்பட்ட உதவிகளை வழங்க தாம் ஆயத்தமாகி வருவதாகவும், எனினும், நாடு முழுவதிலுமுள்ள தமது தளங்களிலிருந்து 24 மணி நேரமும் சேவைகளை வழங்கும் விதத்தில் அனைவரும் தயார்நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமது படைத்துறையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர்கள் அனைவரும், அவசியமேற்படும் பட்சத்தில், அவர்களது வழமையான பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவசரகால பேரிடர் பணிகளில் அமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள