சம்பந்தனில் இல்லத்தில் சந்திப்பு – ஏனைய கட்சிகள் புறக்கணிப்பு!

You are currently viewing சம்பந்தனில் இல்லத்தில் சந்திப்பு – ஏனைய கட்சிகள் புறக்கணிப்பு!

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்குத் தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சந்திப்பு தொடர்பில் நேற்று தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நடைபெற்ற திட்டமிடல் சந்திப்பின்போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை பி.ப 3.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கிலான திட்டமிடல் சந்திப்பொன்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் (பாராளுமன்றக் குழுத்தலைவர் – தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு), தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், இரா.சாணக்கியன், கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொண்டிருக்கவில்லை.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments