“சவால்களுக்கு தயாராகி வருகிறோம்” – ஈரான் எச்சரிக்கைக்கு இஸ்ரேல் பதில்!

You are currently viewing “சவால்களுக்கு தயாராகி வருகிறோம்” – ஈரான் எச்சரிக்கைக்கு இஸ்ரேல் பதில்!

தூதரக தாக்குதல் குறித்து ஈரான் எச்சரிக்கை விடுத்த நிலையில், இஸ்ரேல் எச்சரிக்கையுடன் இருப்பதாக பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் துணை தூதரகத்தின் 2 தளபதிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என ஈரான் எச்சரித்தபோது, இஸ்ரேல் அச்சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை.

இந்த நிலையில் இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு விமான தளத்தில் பேசியபோது, ‘நாங்கள் முழு பலத்துடன் தொடரும் காசாவின் போரின் நடுவில் இருக்கிறோம்…ஆனால் மற்ற பகுதிகளில் இருந்து வரும் சவால்களுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்’ என்றார்.

முன்னதாக, ‘ஈரான் மற்றும் அதன் பினாமிகளிடம் இருந்து வரும் இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான எங்கள் அர்ப்பணிப்பு இரும்புக் கவசமானது’ என நெதன்யாகுவிடம் கூறியதாக ஜோ பைடன் கூறினார்.

இதற்கிடையில் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் Katz, ”ஈரான் தனது எல்லையில் இருந்து தாக்கினால், இஸ்ரேல் பதிலடி கொடுத்து ஈரானைத் தாக்கும்” என்று சமூக வலைதளத்தில் பதிலளித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments