சிங்கப்பூரில் கொரோனா ; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,423 ஆக உயர்வு!

  • Post published:
  • Post author:
You are currently viewing சிங்கப்பூரில் கொரோனா ; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,423 ஆக உயர்வு!

சிங்கப்பூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,423 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிங்கப்பூரில் ஜூன் 1ம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கையில், “சிங்கப்பூரில் இன்று புதிதாக 799 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,423 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள