சிறிலங்காவில் வேகமெடுக்கும் கொரோனா!

You are currently viewing சிறிலங்காவில் வேகமெடுக்கும் கொரோனா!

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் வேகமெடுத்துள்ளது. குறித்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 

ஊரடங்கு சட்டத்தை நீக்கவேண்டாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தபோதிலும், அதை பொருட்படுத்தாமல் தேர்தலை இலக்காக கொண்டு கோட்டபாய ஊரடங்கு உத்தரவை தளர்த்தியிருந்தால். இதனால் நிலமை விபரீதமானது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 பேருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அடுத்துவரும் நாட்களில் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 

0 – 100 நோயாளிகள் 47 நாட்கள்
101 – 200 நோயாளிகள் 19 நாட்கள்
201 – 300 நோயாளிகள் 08 நாட்கள்
301 – 400 நோயாளிகள் 04 நாட்கள்
401 – 500 நோயாளிகள் 02 நாட்கள்

இந்த நிலை தொடர்ந்தால் சிறிலங்கா மேலும் ஒரு இத்தாலியாகவோ, அமெரிக்கா, பிரான்ஸ் போன்றோ ஆகிவிடும் என மருத்துவத்துறை எச்சரித்துள்ளது. 

தாங்கள் விடுத்த அறிவுறுத்தலை சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என மருத்துவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 

பகிர்ந்துகொள்ள