ஜேர்மன் பள்ளிகள் பிள்ளைகளை போருக்குத் தயாராக்கவேண்டும்!

You are currently viewing ஜேர்மன் பள்ளிகள் பிள்ளைகளை போருக்குத் தயாராக்கவேண்டும்!

ஜேர்மன் பள்ளிகள், மாணவர்களை, போர், பெருந்தொற்று, இயற்கைப் பேரழிவுகள் போன்ற நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ள தயாராக்கவேண்டும் என ஜேர்மன் கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை கூறியுள்ளார்.

உக்ரைன் ரஷ்யப் போர், மூன்றாம் உலகப்போர் உருவாகலாம், தாங்களும் போருக்குத் தயாராகவேண்டும் என்பதுபோன்ற எண்ணங்களை பல நாடுகளுக்கு உருவாக்கியுள்ளது.

பிரித்தானிய தரப்பில், பொதுமக்களும் போருக்குத் தயாராகவேண்டும் என குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில், ஜேர்மன் மாணவர்கள் போர் முதலான நெருக்கடிச் சூழல்களை எதிர்கொள்ளத் தயாராகவேண்டும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் கல்வித்துறை அமைச்சரான பெற்றினா (Bettina Stark-Watzinger).

சில நாடுகளில் பள்ளிகளில் பாதுகாப்பு பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படுவது போல, ஜேர்மனியிலும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.

மேலும், பள்ளி மாணவர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நல்ல உறவை உருவாக்கவேண்டும், ராணுவ அதிகாரிகள் பள்ளிகளுக்குச் சென்று ராணுவம் மக்களைப் பாதுகாப்பதற்காக என்ன செய்கிறது என்பதை விளக்கவேண்டும் என்றும் கூறும் பெற்றினா, இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதனால் எதிர்ப்பு உருவாகிறது என்பதைத் தன்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை என்கிறார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments