தடை செய்யப்பட்ட ஆயுதத்தை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா!

You are currently viewing தடை செய்யப்பட்ட ஆயுதத்தை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா!

ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைன் முன்னெடுத்துவரும் எதிர் தாக்குதல்களுக்கு உதவும் வகையில் கொத்து குண்டுகளை அமெரிக்கா அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொத்து குண்டுகள் தொடர்பில் உக்ரைன் விடுத்த கோரிக்கை குறித்து முடிவுக்கு வராமல் பலமுறை தள்ளிவைத்ததாக வெள்ளைமாளிகை குறிப்பிட்டுள்ளது. பொதுமக்களுக்கு அதிக இழப்புகளை ஏற்படுத்தும் என்பதாலையே முடிவெடுக்க தாமதப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

வெடிமருந்து தட்டுப்பாட்டுக்கு மத்தியில் உக்ரைன் பல மாதங்களாக ஆயுதங்களை கேட்டு வருகிறது எனவும் வெள்ளைமாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொத்து குண்டுகள் தொடர்பில், அதன் ஆபத்தை கருத்தில் கொண்டு நூறுக்கும் மேற்பட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.

உக்ரைனுக்கு கொத்து குண்டுகள் அனுப்புவதாக எடுக்கப்பட்ட முடிவு, தம் பங்கிற்கு கடினமான ஒன்று என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் நட்பு நாடுகளுடன் விவாதித்ததாகவும்,

உக்ரைன் தற்போது ஆயுதங்கள் தட்டுப்பாட்டால் திணறி வருகிறது என்பதால், இந்த முடிவுக்கு வந்ததாகவும் பைடன் தெரிவித்துள்ளார். கொத்து குண்டுகளை தங்கள் நாட்டை பாதுகாக்க மட்டுமே உக்ரைன் பயன்படுத்தும் எனவும், அண்டை நாடுகளில் பயன்படுத்தாது எனவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த போர் காலத்தின் எந்த நேரத்திலும் நாங்கள் உக்ரைனை பாதுகாப்பின்றி விடமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments