பேரினவாத சிங்கள அரசு நடத்திய தமிழின அழிப்பிற்கு எதிராக செம்மணியில் வெகுண்டெழுந்த அணையா தீபம் -காணொளி
யாழ்ப்பாணம் அரியாலை – சிந்துபாத்தி மனிதப்புதைகுழி தொடர்பாக உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனக்கோரியும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் வரையிலும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
குறித்த போராட்டமானது மக்கள் செயல் என்கின்ற தன்னார்வ இளையோர் அமைப்பால் இன்றிலிருந்து எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் செம்மணி வளைவுப் பகுதியில் வெகுசனப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன் சர்வதேச விசாரணையை கோரிய கையெழுத்து இடலும் நடைபெறுகிறது குறித்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் சென்று தங்களின் கடமையை நிறைவேற்றுங்கள்









