திருகோணமலை – கண்டி பிரதான வீதி 98 ஆம் கட்டைச் சந்தியை அண்மித்த பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று தம்பலகாமம் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்குச் சொந்தமான கப் ரக வாகனத்துடன் குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மோதுண்டதில் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த இருவரும் 48, 50 வயதுகளையுடையவர்களாவர்.
விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய கப் ரக வாகனத்தின் சாரதியைத் தம்பலகாமம் சிறீலங்கா காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.






