தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் கவனயீர்ப்பு பேரணி!!

You are currently viewing தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் கவனயீர்ப்பு பேரணி!!

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் 27.01.2021 அன்று கவனயீர்ப்பு பேரணி.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் கவனயீர்ப்பு பேரணி!! 1
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் கவனயீர்ப்பு பேரணி!! 2

2009 ஆம் ஆண்டு கொத்துக்குண்டுகள் பொழிய உயிர்காக்கும் உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளை முடக்கி தமிழீழ மண்ணிலே பெருங் கொடூரமாக மனிதநேயமின்றி சிறிலங்கா பெளத்த சிங்களப் பேரினவாத அரசு தமிழின அழிப்பினை மேற்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்த காலப்பகுதியில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி புலத்திலும், தாயகத்திலும், தமிழகத்திலுமாக எம் மக்கள் தொடர் அறவழிப்போராட்டம் மூலம் 11 ஆண்டுகளாக குரல் கொடுத்தவண்ணம் இருக்கின்றார்கள்.
இருப்பினும் நீதியின் கால தாமதிப்பினை தமக்கு சார்பாக பயன்படுத்தி சிறிலங்கா சர்வாதிகார அரசு எப்படியாவது தமிழ் மக்களை அழிக்க வேண்டும் என்னும் நோக்கில் தமிழீழ தேசம் எங்கும் இராணுவ மயமாக்கல்,நில அபகரிப்பு, வளச்சுறண்டல்கள் மற்றும் இனவழிப்பின் ஆதரங்களை அழிப்பதும் என வேகமாக மாற்று வடிவம் பெற்று தமிழின அழிப்பினை முன்னெடுத்தவண்ணம் இருக்கின்றார்கள்.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் கவனயீர்ப்பு பேரணி!! 3
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் கவனயீர்ப்பு பேரணி!! 4

மேலும் ஐக்கிய நாடுகள் அவையின் கால நீடிப்பு தமிழின அழிப்பிற்கான ஆயுதமாகவே கருதப்படும் என்பது திண்ணம், எனவே எதிர் வரும் 46 வது ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு வாழிட நாடுகளிலே தமிழ் மக்கள் பல அறவழிப்போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிக்கின்றார்கள். அந்த வகையிலே பெல்சியம் வாழ் தமிழ் மக்கள் 27.01.2021 அன்று பெல்சியத்தின் தலைநகரில் அமைந்துள்ள வெளி நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சின் முன் தமிழின அழிப்பின் ஆதாரங்கள் மற்றும் நீதிக்கான கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளோடு கவனயீர்ப்பு பேரணியினை பெரும் எழுச்சியாக நடத்தியிருந்தார்கள். அதோடு சிறிலங்கா பயங்கரவாத அரசினை அனைத்துல குற்றவியல் நீதி மன்றத்தின் முன் நிறுத்துவதற்கு சர்வதேச குற்றவியல் விசாரணையினை வலியுறுத்த பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சிடம் நியாயமான கோரிக்கை அடங்கிய மனுவும் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் கவனயீர்ப்பு பேரணி!! 5
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் கவனயீர்ப்பு பேரணி!! 6

மற்றும் எதிர் வரும் 08.02.2021 அன்று நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன்றலில் இருந்து தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பித்து 22. 02.2021 அன்று பல அரசியற் சந்திப்பினூடாக ஐ.நா முன்றலை வந்தடைய இருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக 01.03.2021 வரை அடையாள உண்ணா நோன்பும் மனிதநேய செயற்பாட்டாளர்களால் 46 வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு நடைபெற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அன்புத்தமிழ் உறவுகளே எவ்விடர் வரினும் எம் மாவீரர்கள் சுமந்த கனவினை நாம் ஈடேற்ற தமிழீழ மண்ணின் விடுதலை வேண்டி மேலும் வலுவான போராட்டங்களோடு பயணிப்போம் என இத்தருணம் திடசங்கற்பம் பூணுவோமாக.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் கவனயீர்ப்பு பேரணி!! 7
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் கவனயீர்ப்பு பேரணி!! 8

“மக்கட் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

பகிர்ந்துகொள்ள