தமிழீழ மீட்பிற்கான ஆயுதப் போராட்டம் தவறானது என்ற கருத்தியலை நிலை நிறுத்த விரும்புவர்கள் யார்?

You are currently viewing தமிழீழ மீட்பிற்கான ஆயுதப் போராட்டம் தவறானது என்ற கருத்தியலை நிலை நிறுத்த விரும்புவர்கள் யார்?

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட, தமிழீழ மீட்பிற்கான ஆயுதப் போராட்டம் தவறானது என்ற கருத்தியலை நிலை நிறுத்த விரும்புவர்கள் யார்?

இந்திய புலனாய்வு கொள்கை வகுப்பாளர்கள்,சிறிலங்காவின் நிலைப்பிற்கான புலனாய்வுக் கொள்கை வகுப்பாளர்கள், ஆசியாவில் கேந்திர மையங்களை கையகப்படுத்த நினைக்கும் மேற்குலகினர், சீனா என இப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஏன் இவர்களிற்கு மேதகு வே.பிரபாகரன் அவர்கள் எதிரியானார்?

உலகின் எந்தவொரு விடுதலைப்போராட்டமும் ஏதாவது ஒரு நாட்டின் பின்புலத்திலேயே கட்டியெழுப்பப் பட்டது. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டமானது அதன் சொந்த மக்களின் அர்ப்பணிப்பினாலும், தியாகத்தினாலும் கட்டியெழுப்பப் பட்டது. இங்குதான் மேதகு , உலக புலனாய்வுக்கட்டமைப்புகளால் குறிவைக்கப்படுகிறார். தாயக விடுதலையில் பற்றுறுதியும், நேர்மையும் கொண்ட மேதகு அவர்கள் , தங்களுடைய விருப்பு வெறுப்புகளை , எதிர்பார்ப்புகளை அலட்சியம் செய்கிறார் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்கிறார்கள் .

எனவே மேதகு பிரபாகரன் என்பவர் தமிழருக்கு மிகப்பெரிய பலம் என்பதையும், தங்களுடைய நலன்களிற்கு எமன் என்பதையும் புரிந்து கொண்டார்கள். உலகம் சொல்ல மறுக்கும் கதையும் இதுதான். தென்கிழக்காசியாவில் மிகப்பெரிய ஆயுதம் தரித்த விடுதலை இயக்கத்தை கட்டியெழுப்பிய தேசியத்தலைவர், அத்தோடு சேர்த்து ஆக்கிரமிக்கப்பட்ட தேசங்களை மீட்பதற்கான வழிவரைபடம் ஒன்றையும், மூலோபாயத்தையும் உருவாக்கினார்.

இதுவே உலகில் விடுதலை நோக்கி போராடும் இனங்களிற்கான வழிகாட்டியாக மேதகு பிரபாகரன் அவர்களை இன்றுவரை ,ஒரு மாவீரனாகவும், கதாநாயகனாகவும் கட்டமைத்து வைத்துள்ளது. 2009 மே 18 ம் நாளுடன் விடுதலைப்புலிகளின் கதை முடிந்து விட்டது என மார்தட்டியவர்கள், பிரபாகரன் சிந்தனை நின்று போராடும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் .

That is one man Army, Great mr Prabakaran ஆகவே இவர்களிற்கு இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால் ,விடுதலைப்புலிகளின் ஆயுதபலத்தை அழித்த எங்களால் மேதகு பிரபாகரன் அவர்களின் சித்தாந்தத்தை அழிக்க முடியவில்லையே என்ற தோல்வி மனப்பான்மைதான். பயமும் கூட, உலகிலே சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தேசிய இனங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஏகாதிபத்திய வாதிகளிற்கு பிரபாகரன் சிந்தனை ஒரு சிம்மசொப்பனம்.

எனவே தமிழீழத் தமிழர்களின் முதன்மைத்தளபதி மேதகு பிரபாகரன் சிந்தனையை அழித்தொழிக்க வேண்டும் . ஏனெனில் சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இதில் உடனடி ஆபத்து உள்ளது. சிங்களப் பேரினவாதம் எமது பொது எதிரி, இந்தியா , பிரித்தானியாவினால் வெட்டித்தைக்கப்பட்ட தேசிய இனங்களின் சிறைக்கூடம்.

ஆக இரு தேசங்களும் பிரபாகரன் சிந்தனை என்னும் சித்தாந்தத்தை அழிக்க தம்மால் இயன்ற அத்தனையும் செய்யும் . தாயகத்தில் மறுவாழ்வு என்ற பெயரில் பிரபல ஊடகங்களினால்,எமது போராளிகளின் தகவல்கள் ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன. அதில் ஊடகவியலாளர் குறிப்பிடுவார் எமக்காகப் போராடியவர், அவர்களின் பிள்ளைகள் வாழ வழியின்றி நடுத்தெருவில் நிற்கிறார்கள் , இதுதான் போராட்டம் இவர்களுக்கு கொடுத்த பரிசு என்று, அதே போல எமது விடுதலைப்போரில் பங்குபற்றிய பல போராளிகள் தாயகத்தில் இருக்கிறார்கள் , அவர்களூடாக ஒரு பதிவு வரும், இனிமேல் ஆயுதப் போராட்டம் சரிவராது இடைக்காலத் தீர்வுக்கு போயிருந்தால் இவ்வளவு அழிவும் வந்திருக்காது அண்ணை கொஞ்சம் யோசிச்சிருக்கலாம் என்றவாறு, எனவே யாரெல்லாம் போராட்டத்தின் ஆணிவேராக தூண்களாக இருந்தார்களோ, அவர்களையும், அவர்களின் பிள்ளைகளையும் களத்தில் இறக்கி கொஞ்சம் கொஞ்சமாக ஆயுதப்போராட்டம் தவறு என்பதையே நிறுவ உலக ஏகாதிபத்தியம் முனையும், இதுவே இன்றைக்கு இலங்கைக்கும், இந்தியாவிற்கும். மேற்குலகத்திற்கும் தேவையானது. இனி ஆயுதப் போராட்டம் சரிவராது நாங்கள் அரசியல் தான் செய்யப் போகிறோம் என முடிவெடுக்கும் சக்தி எவருக்கும் கிடையாது.

அந்த உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை. தமிழீழத்தை மீட்டெடுக்க எவ்வழியில் போராட வேண்டும் என்பதை பிரபாகரன் சிந்தனையே முடிவெடிக்கும். That is one man Army. அது நின்று போராடும். மாவீரர்களின் தியாகமும் தேசியத்தலைவரின் சிந்தனையும் என்றைக்குமே எம்மை தவறான பாதையில் வழிநடாத்தி செல்லாது. 2009 மே 18 ற்கு பின்னரான காலம், தமிழ்த்தேசிய செயற்பாடுகளிற்கு சவாலான பல விடயங்களை கடந்து வெற்றிப் பாதையை நோக்கி பயணிக்கிறது. இனிவருங் காலங்களிலும் எத்தகைய சவால்களையும் கடக்கக் கூடிய மனோதிடத்தையும், தெளிந்த சிந்தனையையும் மாவீரர்களும் தேசியத்தலைவரும் தருவார்கள் என நாங்கள் திடமாக நம்புவோம்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments